28/8/14

மனிதனை முட்டாளாக்கும் அமைப்பே மதம்


ஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம்.ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்துக் கொண்டு வாழ நாளடைவில் மனிதன் தன்னைப் பழக்கிக்கொண்டான்.
தன்னை நம்பாமல் பிறரை ஒருவன் நம்பும்போது அவன் செயலிழந்து விடுகிறான்.

அமைதி உங்களைத் தாமதமாக ஆனால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருப்பதே.பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.
அறிவாளிக்கும் இயற்கையை உணர்ந்தவனுக்கும் துன்பமே வராது.கடவுள் எண்ணம் அறிவையே கொன்றுவிட்டது.
பகுத்தறிவைக் கொண்டு ஆய்ந்து, சரி என்று பட்டபடி நடவுங்கள்.
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை கடவுள் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.
மனிதனின் இறப்பு இயற்கை. பிறப்பு : அம்மா, அப்பா செயற்கை.
மனிதனின் கடவுள் உணர்ச்சி மாறமாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.
ஒழுக்கம் என்பது சொல்லுகிறபடி நடப்பதும், நடந்தபடி சொல்வதும் ஆகும்.
நமது இழிநிலையை நீடிக்கும் மண்டபமே கோயில்கள்.
கோயில்கள் அறிவு, பணம் இரண்டையும் இழக்குமிடம்.
நமக்கு வேண்டியதெல்லாம் கோயிலல்ல. பள்ளிக்கூடம்தான்.
அறிவுள்ளவர்க்கு அறிவின் செயல். அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்.
மனிதனை முட்டாளாக்கும், பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும்.
கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக்காரனாகவும்கூட ஆக்கிவிடும்.
பெண்களைக் கூண்டுக்கிளி ஆக்காமல்தாராளமாகப்பழகவிடவேண்டும்.
தனி உடைமை ஒழிந்துவிட்டால் வாரிசு உரிமை என்ற பிரச்சினைக்கே இடமில்லை.
------------------------
@தமிழன் பிரகாஷ்
www.facebook.com/dravidanallathamizhan?fref=nf
========================================

கருத்துகள் இல்லை: