25/5/14

கல்லணை



GRAND ANICUT:கல்லணை:
 கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது
காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில்
உள்ளது.திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்புவில்

உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு
கிளை கல்லணையை வந்தடைகிறது.

 கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.

 பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புதுஆறு ஆகியவற்றிலும்,
வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர்கல்லணையில்இருந்துதிறந்துவிடப்படும்.
எவ்ளோ ஒசரம்
அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்குஇடதுபுறம்
ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்புவில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர்
நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

வரலாறு:
  இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும்
புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான
நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து
கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப்
 புகழப் படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த
 அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர்
அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி
வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல
 இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு
 சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்:
   பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன்
காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்
தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது
சாதாரன விஷயம் அல்லவே .
 ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல்
அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக்கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.

 நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும்.
அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள்
 இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள்
அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து
போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக
மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில்
பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின்
மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய
அணைதான் கல்லணை.

சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு:
  இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற
ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.

  கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை
மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளம் மற்றும் வறட்சியால் வளமை குன்றியது. இந்த
சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர்
ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.

  இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய்
பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு
அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறன்
மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு
'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.

கரிகால சோழன் மணிமண்டபம்:
  பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை
கட்டுமான திறனை காலங்களை கடந்தும் பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழமையான
இந்த அணையையும், இதை கட்டிய கரிகால சோழனையும் கெளரவிக்க,
  கல்லணையில் இருந்து திருகாட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின்
இடது கரை ஓரத்தில் "கரிகால சோழன் நினைவுமணி மண்டபம்"  தமிழகஅரசால்
கட்டப்பட்டு ,தமிழ்நாடு அரசு சார்பாக, 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  12ம்
தேதி  புதன் கிழமை காணொலிகாட்சி மூலம், தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா
அவர்களால் சென்னையிலிருந்து திறந்துவைக்கப்பட்டது.
 இந்த மணிமண்டபம் 4,090 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.
இந்த மண்டபத்தில் 8 அடி உயர யானைசிலை மீது 6 அடி உயரத்தில் அமர்ந்த
நிலையில் கரிகாலசோழன்சிலை  நிறுவுவப்பட்டுள்ளது . கையில் வைத்திருக்கும்
செங்கோல் மீதும், தலையில் உள்ள கிரீடத்தின் மீதும் சோழர்களின் சின்னமான
புலிக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது.
============================================================
                      கல்லணை

கல்லணை உருவாக்கும் ஆறு:     காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம்.
அமைவிடம் :    திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு, இந்தியா.
நீளம்     0.329 கி .மீ (1,079 அடி).
உயரம்     5.4 மீ (18 அடி).
அகலம் (அடியில்)     20 மீ (66 அடி).
திறப்பு நாள்     2 ஆம் நூற்றாண்டு.
வேறு பெயர்  :"தி கிரான்ட் அணைகட்"{GRAND ANICUT}
===================================================
 காவிரி ஆறு
                              ============
  கிளை ஆறுகள்:      

 அமராவதி  • ஆர்க்காவதி  • பவானி  • சின்னாறு  • ஹேமாவதி  • Honnuhole  •
கபினி  • கொள்ளிடம் ஆறு  • லட்மண தீர்த்தம்  • நொய்யல்  • பாம்பாறு  •
சிம்சா.

 அணைகள் :     

 பானாசுர சாகர் அணை  • கல்லணை  • கிருட்டிணராச சாகர் அணை  • மேட்டூர் அணை  •
 மேலணை  • கீழணை.

 புவியியல் :

 வங்காள விரிகுடா  • தக்காணப் பீடபூமி  • ஒகேனக்கல் அருவி  • சிவசமுத்திரம்
 அருவி  • மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்.

 நகரங்களும் ஊர்களும்:    

  Bhagamandala  • பவானி  • சிதம்பரம்  • ஈரோடு  • காரைக்கால்  • கரூர்  •
கொடுமுடி  • குடகு  • குடவாசல்  • கும்பகோணம்  • Kushalanagara  •
மன்னார்குடி  • மாண்டியா  • மயிலாடுதுறை  • மேட்டூர்  • மைசூர்  •
நாகப்பட்டினம்  • நன்னிலம்  • பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)  •
காவிரிப்பூம்பட்டினம்  • பேரளம்  • Sakleshpur  • சிக்கல்  • சீர்காழி  •
திருவரங்கம் வட்டம்  • ஸ்ரீரங்கப்பட்டணம்  • சுவாமிமலை  • தலக்காடு  •
தலைக்காவிரி  • தஞ்சாவூர்  • தரங்கம்பாடி  • திருநள்ளாறு  • திருவையாறு  •
திருவாரூர்  • திருவீழிமிழலை  • திருச்சிராப்பள்ளி  • வைத்தீசுவரன்கோவில்.

 பாசன இடங்கள்:   

 கருநாடகம்  • கேரளம்  •  தமிழ்நாடு • புதுச்சேரி .
===========================================================================
              ஆர்தர் காட்டன்.
   சர் ஆர்தர் காட்டன் (Sir Arthur Thomas Cotton,} மே 15, 1803 – ஜூலை 24, 1899) என்பவர் பிரிட்டிஷ் பொறியாளர் மற்றும் படைத்தளபதி ஆவார். இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்துதரவும், கால்வாய்களை அமைப்பதிலும் அர்ப்பணித்தார். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுகிறார்.  

    வாழ்க்கை வரலாறு.

சர் ஆர்தர் காட்டன் இங்கிலாந்து நாட்டில் செஸ் ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு 1803 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பத்தாவது மகனாக பிறந்தார். பொறியியலில் ஆர்வம் கொண்ட அவர் தனது 15 வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார்.

 1821 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணி ஏற்றார். பின்னர் 1822 ஆம் ஆண்டு ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யபட்டார். இதன் மூலம் கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் பணி வாய்ப்பு காட்டனுக்கு கிடைத்தது.

 தொடர்ந்து பல பதவிகளை வகித்த அவர் சென்னை மாகாண பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். இதனிடையே, 1841 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவர் எலிசபெத் லியர்மந்த் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1899 ஆம் ஆண்டு ஜூலை 14 -ம் தேதி தனது 96 -வது வயதில் காலமானார்.

     கல்லணைக்கு ஆர்தரின் பங்களிப்புகள்.

 1829 இல் காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமித்தது ஆங்கிலேய அரசு. மணல் மேடுகளால் நீரோட்டம் தடைப்பட்டு பயனற்று இருந்த கல்லணையைத் தைரியமாக சிறு பகுதியைப் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறன் மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.

 ஆழம் காண முடியாத மணற்படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தைத் தமிழர்களிடம் அறிந்து கொண்டோம். இதை கொண்டு பாலங்களும், அணைக்கட்டுகளும் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனையைப் புரிந்த அந்நாளைய மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

        மேலணை மற்றும் கீழணைக் கட்டுமானம்.

 கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புவிற்கு வரும் தண்ணீர் நேராகக் கடலில் கலந்து விரயமாகிக் கொண்டிருந்ததைத் தடுக்க கொள்ளிடத்தில் தடுப்பணையைக் (மேலணை) கட்டினர். இதன் மூலம், காவிரி நீர் கொள்ளிடத்தில் செல்வது தடுக்கப்பட்டது. மேலும், வெள்ளக் காலத்தில் உபரி நீரைக் கொள்ளிடத்தில் விடுவதற்கு அந்த அணை பயன்படுகிறது.

 இதனை அடுத்து கொள்ளிடம் ஆற்றில் 1840 ல் கும்பகோணத்திற்கு அருகில் அணைக்கரை எனும் இடத்தில் கீழணையை முழுமையாகக் கட்டியதும் இவரே ஆவார். இதனால் தண்ணீர் வீணாகி கடலில் சென்று கலப்பதைத் தடுத்து வீராணம் ஏரிக்குக் சென்று அங்கு பல்லாயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

   மேட்டூர் அணைக்கு முயற்சி.

  வெண்ணாறு, வெட்டாறு முதலியவற்றில் தண்ணீர் முழவதும் பாசனத்துக்கு பயன்படும் வகையில் திட்டங்களை வகுத்த காட்டன், அடுத்ததாக மேட்டூரில் அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதற்கான அனுமதி பெற சர் ஆர்தர் காட்டன் மைசூர் சமஸ்தானத்துக்கு 1935 ல் சென்றார் ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அம்முயற்சி தடைபட்டது. (அவரது காலத்துக்கு பிறகு 1925 ஆம் ஆண்டு அவரது கோரிக்கை செயல்வடிவம் பெற்று 9 ஆண்டுகால கட்டுமானத்துக்கு பின் 1934 ல் மேட்டூரில் அணை கட்டி முடிக்கப்பட்டது.

    கிருஷ்ணா, கோதவரி நதிகளில் அணைகள்.

  தமிழகத்தை போல் ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் விஜயவாடாவிலும், கோதாவரி நதியில் தவளேஸ்வரத்திலும் அணைகளைக் கட்டினார். ஆந்திரா பூமியை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்றியவர் சர் ஆர்தர் காட்டன் என்றால் மிகை ஆகாது. கோதாவரியில் அணை கட்ட 1878 ல் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை முன் காட்டன் ஆஜராகி அணையின் முக்கியதுவத்தை விளக்க வேண்டிவந்தது[1]. அதே போல் இந்தியாவின் மாநில செயலருக்கும் ஆர்தர் ஒரு கடிதத்தை எழுதினார். அதன் இறுதி வரிகள் இவை

 "மை லார்ட், கோதவரி நதியில் வெள்ள காலத்தில் ஒரு நாளில் ஓடும் நீரின் அளவு, லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வருடம் ஓடும் நீருக்கு சமம் "

 இவரது கோரிக்கை பின்னர் ஏற்றுகொள்ளப்பட்டு கோதாவரி அணையை வெற்றிகரமாக கட்டிமுடித்தார்.

     சிலைகள்.

 ஆந்திராவையும், தமிழகத்தையும் வளமான பகுதிகளாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த காட்டனுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான சிலைகளும் தமிழகத்தில் கல்லணையில் ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.            
==========================================================

கருத்துகள் இல்லை: