14/3/13

உதவிக்கு போன ஆசிரியை





====================

ஆரம்ப வகுப்பு சிறுவன் ஒருவன் விளையாடிய பின்னர் தனது சப்பாத்துக்களை அணிய முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒரு காலில் சப்பாத்தை அணிந்த பின்னர் மற்றதை அணிய முடியாமல் சிரமப்பட்ட அவன் தனது ஆசிரியையை உதவிக்கு அழைத்தான். தான் உண்டுகொண்டிருந்த சிற்றுண்டியை தள்ளிவைத்துவிட்டு அவனுக்கு உதவச் சென்ற ஆசிரியை மிகவும் சிரமப்பட்டு அடுத்த சப்பாத்தை அணிவித்தாள். அதற்குள் அவளத உடலெங்கும் வியர்வை வழியத் தொடங்கியது.

எழுந்து நின்று தனது கால்களை அவதானித்த சிறுவன், "டீச்சர் சப்பாத்து ரெண்டும் கால்மாறிப் போட்டிருக்கு" என்றான்.


ஆசிரியர் முறைத்துப் பார்த்தாள், உண்மைதான். எனவே மீண்டும் சிறுவனை உட்காரச் செய்து சப்பாத்துக்களை சிரமப்பட்டு கழற்றியவள் அவற்றை சரியான ஒழுங்கில் படாத பாடுபட்டு அணிவித்தாள். சப்பாத்து இறுக்கமாக இருந்ததால் அவற்றைக் கழற்றவும் போடவும் பெரும் சிரமப்பட வேண்டியதாயிற்று.

அணிந்து முடிந்தது தான் தாமதம் "டீச்சர், இவை என்னுடைய சப்பாத்துக்கள் அல்ல..." என்றான் சிறுவன். என்ன செய்ய ?
மீண்டும் அதனைக் கழற்றுவதற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

"
சரி உம்முடைய சப்பாத்துக்கள் எங்கே?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தை அடக்கியவாறு கேட்டாள் அவள்.
"
என்னுடைய சப்பாத்துக்கள் நேற்று மழையில் நனைந்து ஈரமாகி விட்டன. இவை என் அண்ணாவுடைய பழைய சப்பாத்துக்கள். அம்மா இன்று இவற்றைத்தான் அணிவித்தாள்" என்று விளக்கமைளித்தான் சிறுவன்.

ஆசிரியைக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. என்ன செய்ய மீண்டும் உட்காரச்செய்து அதே சப்பாத்துக்களை மிகுந்த சிரமப்பட்டு அணிவித்தாள். அணிவித்து முடிந்த பின்தான் சிறுவனின் காலுறைகளைக் காணவில்லையே என்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

"
சரி, உம்முடைய காலுறைகளைக் காணவில்லையே அவை எங்கே?" என்று கேட்டாள் ஆசிரியை.

"அவையா...? அதத்தான் அப்பவே இந்த சப்பாத்துக்குள்ளேயே திணித்து வைத்துடேனே" என்றான் சிறுவன் அமைதியாக.

குறிப்பு: இப்போது, சிறுவன் மருத்துவமனையிலும்,
ஆசிரியை விளக்கமறியலிலும் {ENQUIRY]இருப்பதாக கேள்வி.
நல்ல டீச்சர், நல்ல சிறுவன்...
======== ===========
நீதி: ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு

இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி
:
அரும்பு &பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்.

4 கருத்துகள்:

kandh சொன்னது…

good

VENKU சொன்னது…

ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு

siva சொன்னது…

VENKU சொன்னது… உண்மை
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு.

praba சொன்னது…

thanks >,siva & VENKU